விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டா சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருப்பதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலையில் 40-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்ப்பதாக கூறப்படும் நிலையில் அந்த தொழிலாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதியில் தயார் நிலையில் இருக்கும் நிலையில் பட்டாசுகள் வெடிப்பது நின்றால்தான் உள்ளே சித்தி இருக்கும் தொழிலாளர்களின் நிலை என்னவென்று தெரிய முடியும்.