சென்னை தி.நகரில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் வங்கி வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் ஊழியர்கள் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர் போல ஒருவர் வங்கிக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த வங்கி ஊழியர் ஒருவரை திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியருக்கு காதில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், தப்பி ஓடிய அந்த நபரை சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பிடித்தனர்.

இது தொடர்பாக மாம்பலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த வங்கி ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதை தொடர்ந்து குற்றவாளியை அவர்கள் கைது செய்தனர். சென்னையில் பட்ட பகலில் வங்கியில்  புகுந்து ஊழியர் ஒருவரை துணிச்சலாக நபர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.