மகாராஷ்டிராவின் கல்யாண் அருகே உள்ள அம்பர்நாத் ரயில்நிலையத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலைய ஸ்கைவாக்கில் இருந்து ஒரு கல்லூரி மாணவியின் சங்கிலியை பறித்து, தப்ப முயன்ற திருடரின் செயல் சிசிடிவியில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் நடந்த வேளையில், ஜிஆர்பி மற்றும் ஆர்பிஎஃப் காவலர்கள் அங்கு இருந்ததால், அவரை அந்த இடத்திலேயே தடுக்க முடிந்தது.
போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ரயில் பாதையில் குதித்து தப்ப முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், ஒரு ரயில் அந்த பாதையில் வருவதால் உயிர் அபாயம் ஏற்பட்டது.
महाराष्ट्र के कल्याण में अंबरनाथ रेलवे स्टेशन का एक सीसीटीवी फुटेज वायरल हो रहा है, जहां एक कॉलेज छात्रा की चेन छीनकर भाग रहा चोर फ़िल्मी अंदाज़ में पकड़ा गया, देखिए वीडियो. #Maharashtra #ViralVideo #ABPNews pic.twitter.com/RGCiAvXnnk
— ABP News (@ABPNews) October 3, 2025
“>
இதையும் மீறி, காவல்துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்ததை அனைவரும் பாராட்டுகின்றனர். கைது செய்யப்பட்டவர் முகேஷ் கோலி என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். நிதிச் சிக்கலால் இந்த திருட்டை செய்ததாக அவர் காவல்துறைக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் முழு வீடியோவும் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி, பொதுமக்களிடையே போலீசாரின் வேகமான பதில் நடவடிக்கைக்கு பாராட்டுகள் வெளிப்படுகின்றன.
