மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த 25 வயது பெண் ரிசெப்ஷனிஸ்ட் ஒருவர், முன்பதிவு இல்லாமல் டாக்டரை சந்திக்க வந்த நபரை தடுத்ததற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை நிகழ்ந்தது. ரிசெப்ஷனில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண், டாக்டர் நோயாளி ஒருவரை பார்த்துக் கொண்டிருப்பதால் காத்திருக்கச் சொன்னுள்ளார். இதனால் கோபமடைந்த கோகுல் ஜா என்பவர், அவரை கால் வைத்து அடித்து, தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.

இந்தக் காட்சிகளை பார்த்த பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சம்பவத்தின்போது அங்கு இருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் விரைந்து சென்று பெண் ஊழியரை காப்பாற்றியுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பீ.என்.எஸ். சட்டத்தின் கீழ் தாக்குதல், அக்கிரமமாக பேசல் மற்றும் பெண்ணின் மானத்தைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், சந்தேகநபரான கோகுல் ஜாவை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை என்பது கவலையைக் கிளப்பியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் பணியாற்றும் பெண்கள் அதிகபட்ச மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றும், பாதுகாப்பின்மை காரணமாக இத்தகைய வன்முறைகள் நடைபெறுகின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், வீடியோ ஆதாரம் உள்ள நிலையிலும் கைது நடைபெறாததைக் கண்டித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.