
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும் என்பது குறித்து பார்ப்போம். அதன்படி தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலை குறையும்.
அதன் பிறகு செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கு 15% வரை சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலையும் குறைய இருக்கிறது. இதேபோன்று தோல் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதால் காலணி மற்றும் பரிசுப் உள்ளிட்ட பொருட்களின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் லித்தியம், தாமிரம் உட்பட 25 உலோகங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவை சார்ந்த பொருட்களுக்கான விலையும் குறையும். மேலும் வருமான வரியில் ரூ.3 லட்சம் வரையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.