தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 4 வருடங்கள் ஆகும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து நேற்று விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில் எதிர்க்கட்சிகள் அதனை சரமாரியாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் பட்ஜெட்டின் போது திமுக அரசு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. இது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு காரணமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கையடக்க கணினி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த இரண்டு வருடங்களில் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும். பணி புரியும் பெண்களின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
பெண்கள் பெயரில் பதிவு கட்டணம் செய்தால் பத்திரப்பதிவுக்கு ஒரு சதவீதம் கட்டணம் குறைக்கப்படும். இந்த சலுகை 10 லட்சம் மதிப்புள்ள வீடு மனை மற்றும் நிலங்களை பதிவு செய்யும் பெண்களுக்கு பொருந்தும்.
சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் நவீன தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்படும். இதில் புதிய அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி நிறுவனங்கள், மெட்ரோ சேவை,உலக தர வசதி உடைய தொழில்நுட்ப நிறுவனங்கள் என வெளிநாட்டில் இருப்பது போன்று குளோபல் சிட்டியாக அமைக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய சரண் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் தங்களுடைய ஈட்டிய விடுப்பில் வருடம் தோறும் 15 நாட்களை ஒப்படைப்பு செய்து அதனை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
சென்னை பூந்தமல்லி-போரூர் மெட்ரோ வழித்தடம் இடையே இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் ஏர்போர்ட் அமைக்கப்படும். அதோடு ஏர்போர்ட் மற்றும் கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தடம் நீட்டிபுக்கு 9335 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற ஆறு அட்டகாசமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த ஆறு அறிவிப்புகளும் வரவேற்பை பெறக்கூடியதாக இருப்பதால் இது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
