செல்போன் மற்றும் பணம் தர மறுத்த கணவரை, மனைவி கத்தியால் குத்திக் கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜம்தாரா மாவட்டம் மிஹிஜாம் பகுதியில் வசித்து வந்த மகாவீர் யாதவ் (வயது 40) என்பவர், தனது மனைவி காஜல் தேவியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே குடும்ப தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காஜல் தேவி, கணவரிடம் செல்போன் மற்றும் செலவுக்காக பணம் கோரியுள்ளார். மகாவீர் யாதவ் அதனை மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு தீவிரமான நிலையில், ஆத்திரம் அடைந்த காஜல், வீட்டு சமையலறையில் இருந்த கத்தியால் கணவரை குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான தகவலைப் பெற்றதும், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மகாவீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதைத்தொடர்ந்து, காஜல் தேவியை கைது செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைப் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
