தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 கோடி வரை கடன் வழங்கப்படும். இதில் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு முதலீட்டு கழகம் மூலமாக 25 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சமாக 75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். அதன் பிறகு அனைத்து பிரிவினருக்கும் மூன்று சதவீதம் பின் முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் கடன் பெற விரும்பும் பொது பிரிவினருக்கு 25 வயது முதல் 35 வயது இருக்க வேண்டும். இதேபோன்று சிறப்பு பிரிவு பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும். இந்த மானிய கடனை பெறுவதற்கு 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு அல்லது ஐஐடி போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழிற்சார்ந்த பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் கடன் பெற விரும்பும் பொது பிரிவினர் தங்களுடைய பங்களிப்பாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் என்ற முகவரிக்கோ அல்லது 04362-257345, 255318 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு கேட்டு அறியலாம். மேலும் இந்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளதோடு காஞ்சிபுரம்  மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.