கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உதயசத்திரன். இவரது வீட்டிலிருந்த பிரிட்ஜிற்கு பின்னால் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்துள்ளது. இதனால் என்னவென்று பார்ப்பதற்காக உதயசந்திரன் பிரிட்ஜை திருப்பி உள்ளார்.

அப்போது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து வன ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் 15 நிமிடங்கள் அந்த பாம்பு ஆக்ரோஷமான நிலையில் படம் எடுத்து நின்றது. பின்னர் அதனை சாந்தப்படுத்தி செல்லா பாட்டிலில் பிடித்தார். பிடிபட்ட பாம்பிற்கு குடும்பத்தினர் சூடம் காட்டி அனுப்பி வைத்தனர். பின்னர் பிடித்த பாம்பை செல்லா காப்பு காட்டில் விட்டுள்ளார்.