தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று  சென்னை கண்ணகி நகரில் ரூ.3.8 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட விழுதுகள் சேவை மையத்தை தொடங்கி வைத்தார். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகிறது.

பின்னர் அங்குள்ள அரசு பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து அவர்களுடன் உட்கார்ந்து பேசி விளையாடினார்.

அவர் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எழுந்தார். அப்போது திடீரென முதல்வர் ஸ்டாலின் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிவந்து முதல்வரை தாங்கி பிடித்தனர். இது தொடர்பான வீடியோவை அதிமுக தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது‌.

அதோடு படப்பிடிப்பில் கீழே தடுமாறி விழுந்த தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் மு.க ஸ்டாலினால் திடீர் பரபரப்பு. படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் முதல்வர் ஸ்டாலினை அவர்கள் கேலி செய்து வீடியோ வெளியிட்டுள்ளது திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.