
பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பச்சை வழித்தடத்தில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூறையில் பராமரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அங்கு வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாகவும் பலத்த காற்று காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூறையில் பாதிப்பு ஏற்பட்டதால் இதனை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சரி செய்த நிலையில் தற்போது இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத திடீர் தடங்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.