அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்தில் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது முக்குலத்தோரை வஞ்சிக்கும் எடப்பாடியே தேவர் மண்ணில் கால் வைக்காதே என தேனி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதோடு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அவர் கட்சியிலிருந்து நீக்கியதால் ஏராளமான அதிமுகவினர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். இதன் காரணமாக அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடியாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் திண்டுக்கல்லில் நடந்த பிரச்சார கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இந்த வாக்குறுதியை கொடுத்ததோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க ஒன்றிய பாஜக அரசிடம் கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார்.
