ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அவசர கால ரெட் அலர்ட் விடுத்துள்ளது. போர் சூழல் நிலவுவதால், இந்தியர்கள் பாதுகாப்பு கருதி அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வதையும் மறு உத்தரவு வரும் வரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​பாதுகாப்பு கருதி இஸ்ரேல் தனது வான்பரப்பை மூடியுள்ளதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியத் தூதரகம் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அவசர காலங்களில் மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பு பதுங்கு குழிகளைப் பயன்படுத்துமாறும், தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை உடனுக்குடன் கவனித்து வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், இந்தியத் தூதரகத்தின் 24×7 ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
​தொலைபேசி: +972-54-7520711 / +972-54-3278392
​மின்னஞ்சல்: [email protected]