பொதுவாக அந்த நாள் முதல் இந்த நாள் வரை பச்சை குத்துவது என்பது வழக்கம் தான். பொதுவாக பலரும் தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்கள் அல்லது உருவங்களை பச்சையாக குத்திக் கொள்வார்கள். ஆனால் தற்போது இது  டாட்டூ என்று மாறி உடல் முழுவதும் சிலர் போட்டு கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது திருச்சியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் டாட்டூ குத்துவதில் ஒரு படி மேலே சென்று ஆபத்தான செயல்களின் ஈடுபட்டதால் தற்போது அவரை கைது செய்துள்ளனர். இவரை ஏலியன் பாய் என்று அழைக்கிறார்கள். இவர் நாக்கின் நுனி பகுதியை இரண்டாக வெட்டி டாட்டூ குத்தியுள்ளார். மிகவும் ஆபத்தானது உயிருக்கே கூட உலை வைக்கலாம். இதில் ஹரிகரன் தன்னுடைய நாக்கை இரண்டாக வெட்டி டாட்டூ குத்திய நிலையில், கண்களில் நீல நிற ஊசிகளை செலுத்தி கண்களை நீல நிறமாக மாற்றியுள்ளார்.

இவர் இதுவரை 4 பேருக்கு நுனி நாக்கை இரண்டாக வெட்டி டாட்டூ குத்தியுள்ளார். இவர் செய்த விஷயங்கள் எல்லாம் அவருடைய instagram பக்கத்தில் இருக்கிறது. இவரும் அனுமதி இன்றி முறையான பயிற்சி இன்றி நாக்கை வெட்டி அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்த நிலையில் அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்த நிலையில் அவரிடம் நடத்தி விசாரணையில் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது உடலின் அந்தரங்க பாகங்களிலும் இவர் டாட்டூ குத்துவாராம். இதற்காக ஒரு நபருக்கு ரூ.50,000 வரை வாங்கியுள்ளார். இதன் மூலம் அவருக்கு மாதம் 3 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. இவருடன் கடையை விளம்பரப்படுத்தியதற்காக ஜெயராமன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.