சத்தீஸ்கர் கவர்தா மாவட்டத்தில் கல்யாண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் திருமணமான 2 நாளில் மணமகன் இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கவர்தாவின் சாமரி கிராமத்தில் வசித்து வந்த ஹேமேந்திர மெரவி என்பவருக்கு மார்ச் 31ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இத்திருமணத்துக்கு வந்தவர்கள் அன்பளிப்புகளை வழங்கியிருந்தனர்.

அதன்படி புதியதாக வழங்கப்பட்ட ஹோம் தியேட்டரை ஹேமேந்திர மெரவி ஏப்ரல் 2-ஆம் தேதி திறந்து பார்த்துள்ளார். பின் பிளக்குடன் அதை இணைத்தபோது ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியது. இதனால் ஹேமேந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.