மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப காற்று பலூனில் பறக்கத் திட்டமிட்டார். அதற்காக அவர் பலூனில் ஏறியிருந்தபோது, பலத்த காற்று காரணமாக பலூன் மேலே எழும்ப முடியாமல் தடுமாறியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
टला बहुत बड़ा हादसा, मंदसौर में MP CM मोहन यादव बाल-बाल बचे, हॉट एयर बैलून में लगी आग, सुरक्षाकर्मियों ने समय रहते संभाली ट्रॉली#Madhyapradesh #MohanYadav #BreakingNews | #ZeeNews pic.twitter.com/vyzaBD2iCQ
— Zee News (@ZeeNews) September 13, 2025
“>
அடுத்த சில விநாடிகளில் எதிர்பாராத விதமாக பலூனில் தீப்பற்றியது. உடனடியாக சமயோசிதமாக செயல்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள், முதல்வரை விரைவாகக் காப்பாற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாதது அதிர்ஷ்டமாகும். சம்பவத்தால் அங்கு இருந்தோர் ஒரு கணம் பதட்டமடைந்த போதிலும், பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
