பாகிஸ்தானில் சேனல் விவாதத்தின் போது அரசியல் தலைவர்கள் சண்டையிடும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

எக்ஸ்பிரஸ் டிவியில் பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜாவேத் சவுத்ரி தொகுத்து வழங்கிய ‘கல் தக்’ என்ற பேச்சு நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் செனட்டர் அஃப்னான் உல்லா கான் மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பிடிஐ) தலைவரும் வழக்கறிஞருமான ஷேர் அப்சல் மார்வாட் ஆகியோர் விவாதத்தின் போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

பிடிஐ தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் ராணுவ அமைப்பினருடன் தவறாக நடந்து கொண்டதாகவும்,  ராணுவ அமைப்பினருடன் ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் அஃப்னான் உல்லா குற்றம் சாட்டினார். இதைக் கேட்ட மார்வாட் ஆத்திரமடைந்து இருக்கையில் இருந்து எழுந்து அஃப்னான் உல்லாவின் தலையில் அடித்தார். பின் அஃப்னானும் பதிலடி கொடுத்தார். அப்போது இருவரும் எழுந்து நின்று அடித்துக் கொண்டனர். பின்னர், விவாதத்திற்கு பதிலாக, நேரலையாக சண்டை நடந்தது. இதையடுத்து நிலைமை  மோசமாகியதால், சேனல் தொகுப்பாளர் மற்றும் குழுவினர் அவர்களை தடுத்து அழைத்துச் சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இருவருக்கும் எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.  இந்த வீடியோவை ஏற்கனவே பலர் பார்த்து ஷேர் செய்துள்ளனர். வீடியோவின் கீழ் பல கருத்துக்கள் வந்தன. இதனால் இருவரும் தங்கள் தரப்பை காக்க முன் வந்தனர். இம்ரான் கானுக்கு எதிராக அஃப்னான் மோசமான கருத்துகளை தெரிவித்ததாக மார்வாட் கூறினார். அதேபோல அஃப்னானுல்லா கான், பேச்சு நிகழ்ச்சியின் நடுவில் மராவத் என்னைத் தாக்கினார். நான் அகிம்சையை கடைபிடிக்கிறேன். ஆனால், நான் நவாஸ் ஷெரீப் ராணுவ வீரர். அதை மறந்துவிடக் கூடாது என்று ட்வீட் செய்துள்ளார்.

https://twitter.com/MuhammadTa25198/status/1707444470944288877