பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனேரோ நகரத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தொலைக்காட்சி செய்தியாளரான கிளாரா நேரி என்பவர், ஒரு செய்தி நிகழ்ச்சிக்கான நேரலைக்குப் தயாராக இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், அவரது கைபேசியை பறிக்க முயன்றுள்ளார்.
கிளாரா நேரி, போடஃபோகோ என்ற பகுதியில் பாதையில் நின்றபடியே கைபேசியை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், திடீரென அவரை நெருங்கி, கைபேசியை பறித்து சென்றார்.
Phone snatched from journalist moments before live broadcast in Rio’s Botafogo district pic.twitter.com/ztwloH1mSm
— Jungle Journey (@JnglJourney) July 29, 2025
இந்த சம்பவம் 28 ஜூலை திங்கட்கிழமையன்று காலை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. கைப்பேசி திருட முயன்ற அந்த மோட்டார் சைக்கிள் நபர், தனது வாகன எண்ணை மறைக்க ஒரு கார்ட்போர்டு துண்டை பயன்படுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக கிளாரா நேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் தற்போது அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அந்த நபரை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். ரியோ டி ஜெனேரோ நகரத்தில் கைபேசி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஜூன் மாதத்தில் 1,808 கைபேசிகள் திருடப்பட்டிருக்கின்றன. ஆனால், ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,300 ஆக அதிகரித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் நகரத்தில் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
