அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியில் வசிக்கும் 25 வயதான டயானா மொன்டானோ என்பவர், தன்னை விட 51 வயது அதிகமான 76 வயதுடைய எட்கர் என்ற முதியவரை காதலித்து வருகிறார். அவர்களின் காதல் வாழ்க்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காதலுக்கு வயது முக்கியமல்ல என்பதற்கான சான்றாக இவர்கள் வாழ்ந்து காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக டயானா கூறும்போது, “வயது என்பது வெறும் எண் தான். எட்கரே என் வாழ்நாள் காதலர். அவரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் குடும்பம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், எனது உணர்வுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். எட்கர் எனக்கு எல்லையில்லா இன்பத்தைக் கொடுக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

அவர்களது காதலின் பின்னணி குறித்து தெரியவருவதாவது, எட்கரின் முன்னாள் காதலி மூலமாகவே டயானா அவரை சந்தித்தார். அதன் பிறகு, இருவரும் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், எட்கர் தனது காதலை டயானாவிடம் தெரிவித்ததாகவும், உடனே டயானாவும் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த காதலுக்கு டயானாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த காதல் சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், நெட்டிசன்களிடையே கலந்த கருத்துக்கள் உருவாகியுள்ளது. சிலர் “இது இயற்கைக்கு மாறானது” என விமர்சித்து வருகிறார்கள். ஒருசிலர் காதலுக்கு வயது தடையல்ல என்பதை ஆதரிக்கின்றனர். வயது, சமூகம், மதம் என எந்ததீட்டுகளையும் மீறி காதலிக்கின்ற இந்த ஜோடி, உண்மையான பாசத்துக்கான உதாரணம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.