தமிழக முதலமைச்சர் விஜய் திடீரெனத் தனது வீட்டிற்கு வருகை தந்ததால், “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; பேச வார்த்தைகளே இல்லை, ஒன்றுமே புரியவில்லை” என மூதாட்டி செல்லாம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நெகிழ்ந்துபோய் பேசியுள்ளார். தனது எளிய வீட்டிற்குத் தேடி வந்த முதலமைச்சர் விஜய்யின் கையைப் பாசத்துடன் பிடித்து, வீட்டிற்குள் அழைத்துச் சென்ற அவரது அன்பு நிறைந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும், எந்தவித ஆடம்பரமும் இன்றி எளிய மக்களின் இடத்திற்கே நேரடியாகச் சென்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எதிர்பாராத விதமாகத் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற முதலமைச்சரைப் பார்த்த மூதாட்டி செல்லாம், அப்படியே உறைந்துபோய், அன்பால் அவரது கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் மல்க வரவேற்பளித்தார்.
முதலமைச்சரின் இந்த அன்பான சந்திப்பும், அதைத் தொடர்ந்து மூதாட்டி செல்லாம் வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான வார்த்தைகளும் இணையவாசிகளின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. மக்களோடு மக்களாக நின்று அவர்களின் குறைகளைக் கேட்கும் முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி விசிட் மற்றும் பாசமான நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
