தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் நடக்கும் தொடர் கொலைச் சம்பவங்கள் குறித்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 படுகொலைகள் அரங்கேறியுள்ளதாகப் பத்திரிகைகளில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களின் நாகரிகத் தொட்டிலான தாமிரபரணி நதிக்கரை பகுதிகளைக் கொலைகளின் கூடாரமாக திமுக அரசு மாற்றிவிட்டதாகச் சாடியுள்ளார்.
தமிழகத்தின் அமைதியைச் சிதைக்கும் இத்தகைய போக்கைத் தமிழக மக்கள் வரும் தேர்தலில் தயவுதாட்சண்யமின்றி நிராகரிப்பார்கள் என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
