நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் கன்மாய் உடைந்து வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தாமிரபரணி, மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட ஆறுகளின் உபரி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதனிடையே மாவட்ட நிர்வாகங்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் துரிதப்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 9 அமைச்சர்களை நியமித்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.. மேலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.. இந்த 4 மாவட்ட மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை (19.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம். கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..