நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் பெற்று பயன் பெறுகிறார்கள். அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது. இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் நோக்கத்தில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான கால அவகாசம் முன்பு செப்டம்பர் வரை கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அக்டோபர் 31 வரை நீடிக்கப்பட்டது. ஆனால் பலரும் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்காததால் டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கேஒய்சி அப்டேட் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை ரேஷன் கடைகளில் சமர்ப்பிக்கலாம். மேலும் https://tnpds.gov.in என்று ஆன்லைன் முகவரியிலும் அப்டேட் செய்யலாம்.

நாட்டில் ஏற்கனவே 5.8 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது போலி ரேஷன் கார்டுகளை களையெடுக்கும் விதமாகத்தான் ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் எனவும் இகேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதன்மூலம் தற்போது 5.8 கோடி பேர் போலி ரேஷன் கார்டுகள் பயன்படுத்துவது தெரிய வந்த நிலையில் அதனை மத்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் ரேஷன் அட்டைதாரர்கள் இகேஒய்சி அப்டேட்டை சரிபார்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி கால அவகாசம் முடிவடைந்து விட்டது.

ஆனால் பலர் இந்த செயல்பாட்டை முடிக்காததால் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதால் இன்னும் சில காலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை நாட்கள் என்பது சரிவர வெளிவரவில்லை. மேலும் இதன் காரணமாக உடனடியாக ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி அப்டேட்டை சரி பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.