இன்றைக்கு உங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையம் இல்லாமல் கூட யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம். அதற்கு உங்களுடைய ஸ்மார்ட் போனில் 080 4516 3666 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அதே போன் நம்பரை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குகளின் பட்டியலை உள்ளிட வேண்டும்.

உங்கள் டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கங்கள் மற்றும் காலாவதி தேதியை வெற்றிகரமாக அமைத்த பிறகு இணைய இணைப்பு இல்லாமலும் யு பி ஐ பணம் செலுத்தலாம். நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் யு பி ஐ ஐ டி/ போன் நம்பர் மற்றும் வங்கி கணக்கு எண்ணையும் உள்ளிட வேண்டும். யுபிஐ பின்னை உள்ளிடவும். இந்த சேவையின் மூலமாக அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பலாம்.