டெல்லியில் கிரிக்கெட் விளையாட்டின் போது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பாரத் நகர் பகுதியில் கிரிக்கெட் போட்டியின் போது விஷால் குமார் என்பவரது தம்பிக்கும் மற்றும் பிற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து தனது அண்ணன் விஷால் குமாரை தனக்கு ஆதரவாக சண்டை செய்ய மைதானத்திற்கு தம்பி அழைக்க, மைதானத்திற்கு விஷால் குமார் செல்ல அங்கிருந்த இளைஞர்கள் இரக்கமின்றி கிரிக்கெட் மட்டைகளால் அவரை கடுமையாக தாக்கினார்.

இதில் கடுமையான உள் காயம் அடைந்த விஷால் குமார் பக்கம் பார்க்கத்தினர் தூக்கி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், இதை எடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.