டெல்லி பகுதியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில், கடந்த சனிக்கிழமை மாலை சாலைப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, 15 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவம் நிகழ்ந்த வேளையில் சிறுமி சாலையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வந்த கருப்பு ஹூண்டாய் வென்யூ கார், வேகமாக வந்து சிறுமி மீது மோதியது. அந்த இடத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை தூக்கிச் சென்று அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பெறும் போது சிறுமி உயிரிழந்தார்.
Eid Joy Turns To Mourning As Car Driven By 15-Year-Old Crushes Toddlerhttps://t.co/EgneblDKUW
NDTV’s @anushkagarg 2000 reports pic.twitter.com/k8z5jx9Pm8
— NDTV (@ndtv) March 31, 2025
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், வாகனம் சிறுமியின் வீட்டாருக்குத் தெரிந்தவர்களான அண்டை வீட்டுக்காரரின் மகனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. சம்பவத்தின்போது காரை அவர் 15 வயது மகன் ஓட்டியிருந்தார். மேலும் அந்தக் காரை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனையும் கைது செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
