அமெரிக்கா சிகாகோவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 42 வயதான கெவின் வாட்சன் என்ற நபர் பேஸ்புக்கில் நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் சிகாகோவின் தெற்கு ஆஸ்டின் பகுதியில், காவல் நிலையத்திலிருந்து சில வீதிகள் தூரத்தில் நடந்தது. போலீசார் கூறியதாவது, வாட்சன் தனது காரில் அமர்ந்திருந்தபோது, மற்றொரு வாகனம் வந்து அதில் இருந்தவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில வினாடிகளில் நடந்த இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்த தருணங்கள் நேரடியாக பேஸ்புக் லைவில் பதிவாகியிருந்ததால், அந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில் வாட்சன் காரிலிருந்து இறங்கிய சில நொடிகளில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. அவர் அருகிலுள்ள மதுபானக் கடையில் இருந்த உறவினரை சந்தித்துவிட்டு, தனது காரில் அமர்ந்தவுடன் நேரலை தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்குள் தாக்குதல் நடந்ததால், அவரது இறுதி தருணங்கள் அனைவரும் நேரிலேயே பார்த்துவிட்டனர்.
NEW: Chicago man shot and k*lled while on Facebook Live, becomes the second person k*lled on that block this week.
Horrific.
42-year-old Kevin Watson was seen on camera talking about a parking dispute when a driver approached him.
Watson then got out of the car on the 5000… pic.twitter.com/LG6fwJGgJ8
— Collin Rugg (@CollinRugg) August 14, 2025
“>
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. வாட்சனின் மரணத்தால் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதே பகுதியில் இந்த வாரமே இன்னொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சிகாகோவில் தொடர்ந்து நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து மக்கள் கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
