தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்த அசின், கடந்த 2016-ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ‘ஆரின்’ என்ற ஒரு அழகான மகள் இருக்கும் நிலையில், தற்போது இந்தத் தம்பதி தங்களது 10-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர். இந்தச் சிறப்பான நாளில் ராகுல் சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அசினைப் புகழ்ந்து ஒரு உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “என் வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நீயே ஒரு அற்புதமான இணை நிறுவனர் (Co-founder). உனது பயணத்தில் ஒரு துணை நடிகனாக (Sidekick) இருக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு வளரும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் போல அசின் தங்கள் வீட்டையும் இதயத்தையும் வழிநடத்த வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் அவர் அருகிலேயே இருக்க விரும்புவதாகவும் ராகுல் சர்மா தெரிவித்துள்ளார்.