மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள டி-மார்ட் (D-Mart) அங்காடி ஒன்றில், தாய்ப்பால் புகட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவரைப் பார்த்து அநாகரிகமாகக் கருத்து தெரிவித்த ஊழியர்களை, வாடிக்கையாளர் ஒருவர் கடுமையாகச் சாடிய காணொளி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரில் உள்ள ஒரு டி-மார்ட் கிளையில், பெண் ஒருவர் தனது குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் மற்றொரு ஊழியரைப் பார்த்து, “நீ பால் குடிக்கிறாயா?” என ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கவனித்த வாடிக்கையாளர் ஒருவர், உடனடியாக அங்கிருந்த ஊழியர்களிடம் சென்று கேள்வி எழுப்பினார். அந்த உரையாடலைத் தனது அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த அவர், ஊழியர்களைக் கண்டித்தார். அப்போது, அந்த ஊழியர்களில் ஒருவர் தங்களுக்குள் பேசிக்கொண்டதை ஒப்புக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர், “நீ உன் தாயின் பாலைக் குடிக்கவில்லையா?” என்று ஊழியர்களைக் காட்டமாக
View this post on Instagram
ச் சாடினார்.
சம்பவத்தின்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நிலையைச் சித்தரிக்கும் இந்த காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அங்கிருந்த சூழலை இந்தக் காணொளி காட்டுகிறது. இருப்பினும், இந்தச் சம்பவம் சரியாக எப்போது நடந்தது என்பது குறித்த முழு விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து டி-மார்ட் நிர்வாகத்திடமிருந்தோ அல்லது காவல் துறையினரிடமிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இருப்பினும், இணையவாசிகள் பலர், “பொது இடங்களில் பெண்களுக்கு இத்தகைய அநாகரிகமான சூழல் நிலவுவது வேதனையளிக்கிறது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
