உல்லாசமாக இருக்க அழைத்து, கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் (27), கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவுக்கு வந்தார். அப்போது அவருக்கு பைந்தூரைச் சேர்ந்த அப்துல் சவத் (28) என்பவருடன் நட்புறவு ஏற்பட்டது.

இதையடுத்து, அப்துல் சவத் மூலம் சந்தீப் குமாருக்கு, குந்தாப்புராவைச் சேர்ந்த அஸ்மா (42) என்பவர் அறிமுகமானார். கடந்த 2-ந்தேதி, அஸ்மா, சந்தீப்குமாரை தொடர்பு கொண்டு, “உல்லாசமாக இருக்க வருங்கள்” என அழைத்ததாக கூறப்படுகிறது. அஸ்மாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு கு வந்த சந்தீப் குமாரை, அவர் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும், அஸ்மா தனது கூட்டாளிகளை அழைத்துள்ளார். பின்னர், அஸ்மா, அப்துல் சவத் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, சந்தீப் குமாரை கத்தி காட்டி மிரட்டி, ரூ.3 லட்சம் பணம் கேட்டு தாக்குதல் நடத்தினர்.

தப்பிச் செல்ல முயன்ற சந்தீப்பை அவர்கள் தாக்கி, கயிற்றால் கட்டி வைத்து அவரது சட்டை பையில் இருந்த ரூ.6,200 பணத்தை பறித்துள்ளனர். மேலும் அவரது செல்போனைப் பயன்படுத்தி ‘கூகுள் பே’ மூலமாக மூன்று தவணைகளாக ரூ.35,000, அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.40,000 வரை பறிக்கப்பட்டது. இரவு 11 மணியளவில் சந்தீப் குமாரை அவர்கள் விடுவித்தனர். “போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவோம்” என மிரட்டியபோதும், அவர் உ போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்காரின் உத்தரவுப்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நாயக், துணை போலீஸ் சூப்பிரண்டு குல்கர்னி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இது பற்றி தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்: அப்துல் சவத் (28) அஸ்மா (42) சைபுல்லா (38) முகமது நசீர் (36) அப்துல் சத்தார் (23) அப்துல் அஜீஸ் (26) எனப் தெரியவந்தது.

மேலும் இவர்கள் வசம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களை நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.