குஜராத் மாநிலம் வதோதராவின் தேசர் தாலுகாவில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நள்ளிரவில் தன் வீட்டிற்குத் திரும்பிய ஒரு தாய், அங்கே கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பெற்ற தந்தை என்றும் பாராமல் அந்த நபர், தன் 13 வயது சொந்த மகளை வாயில் துணியை வைத்து அடைத்து கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நள்ளிரவில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த தாயும் அவரது சகோதரியும் இந்த கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டுள்ளனர்.

​அவர்களைக் கண்டதும் அந்த காம மிருகம் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. அதன் பின்னர், நிலைகுலைந்து போயிருந்த தன் மகளை மீட்ட அந்த தாய், அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தேசர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்ற மகளுக்கே தந்தையால் நேர்ந்த இந்த கொடூரம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.