மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமான நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவியை பிரிந்ததில் மன உளைச்சலில் இருந்த இவர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரு பாட்டில் மதுவை குடித்துவிட்டு மற்றொரு பாட்டிலில் பூச்சி மருந்து கலந்து பாதியை குடித்துவிட்டு வைத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த அவருடைய நண்பர் ஜெரால்டு (24) போதையில் பூச்சி மருந்து கலந்த மதுவை எடுத்து குடித்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெரால்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜோதிபாசு தற்போது நலமாக உள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
