அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகார்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்தது. இதை அடுத்து டிரம்ப் மீது நாட்டை ஏமாற்றம் முயன்றது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறாக செயல்பட்டது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தல் முடிவில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்யாமல் தடுக்க டொனால்ட் டிரம்ப் இத்தகைய சதி வேலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சமீபத்தில் டொனால்ட் ட்ரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சமன் அனுப்பிய நிலையில், தான் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதை தடுக்க தான் இப்படி ஒரு சதி வேலை நடக்கிறது என டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சி செய்திருந்தாலும் தற்போதும் அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.