கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணம் முடிந்து 18 வருடங்கள் ஆன நிலையில் சேவியர், எல்லா கிரேஸ், ஹாட்ரியன் என மூன்று குழந்தைகள் இத்தம்பதிக்கு உள்ளனர். பிரதமர் மற்றும் அவரது மனைவி சோபி தங்கள் குழந்தைகளை அன்பான மற்றும் கூட்டு குடும்ப சூழலில் வளர்த்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தனது 18 வருட மண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபியை பிரிய போவதாக instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல கடினமான உரையாடல்கள் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.