நீட் பல் மருத்துவ முதுநிலை படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 259 பல் மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் 6228 இடங்களை நிரப்ப கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை natboard.edu.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களை ஏப்ரல் 12ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.