தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் இறுதியாக தமிழில் ஹே சீனாமிக்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இதனிடையே காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kajal A Kitchlu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kajalaggarwalofficial)