இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி செலுத்தும் போது உங்கள் பரிவர்த்தனைகள் சீராக செயல்படுகிறதா மற்றும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் உங்களின் யூபியை பின்னை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதனை எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிரக்கூடாது. அதே சமயம் பிறந்த தேதி மற்றும் வரிசை எண்கள் என எளிதில் கண்டுபிடிக்கும் எண்களை UPI பின்னாக பயன்படுத்தக் கூடாது.

அதிகாரப்பூர்வமான UPI பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டண சேவை வழங்கக்கூடிய அதிகாரப்பூர்வ யூ பி ஐ பயன்பாடுகளை மட்டுமே நிறுவி பயன்படுத்த வேண்டும்.

யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது பணம் பெறுபவர்களின் யு பி ஐ ஐ டி , VPA எப்போதும் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.

நீங்கள் பண பரிவர்த்தனையை தொடங்குவதற்கு முன்பு அனுப்ப வேண்டிய தொகையை சரிபார்க்க வேண்டும்.

உங்களின் வங்கியை போலவே ஆள்மாறாட்டம் செய்து மின்னஞ்சல் மூலமாக அல்லது குறுஞ்செய்தி மூலமாக அல்லது லிங்க் ஏதாவது வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம். சந்தேகப்படும்படி அழைப்புகள் வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பணப்பரிவினை செய்வதற்கு முன்பு உங்களின் நெட்வொர்க் இணைப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களின் பணப்பரிவர்த்தனை பதிவுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். பரிவர்த்தனை ஐடிகள்,தேதிகள் மற்றும் தொகைகள் உட்பட யு பி ஐ பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் பராமரிப்பதன் மூலமாக பிற்காலத்தில் ஏதாவது முரண்பாடுகள் ஏற்பட்டால் அது உதவும்.

உங்களின் யு பி ஐ பயன்பாட்டை தற்போது இருக்கும் பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும். அதில் பாதுகாப்பு மற்றும் பிழை திருத்தங்கள் ஆகியவை இருக்கும்.

உங்களின் வங்கி அறிக்கைகள் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை அடையாளம் காணுவதற்கு அல்லது பரிவர்த்தனை ஹிஸ்டரியை தவறாமல் மதிப்பாய்வு செய்வதற்கும் உதவும்.

உங்களின் செயலிகளில் கைரேகை அல்லது முக அங்கீகாரம் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துவது நல்லது.