இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் யுபிஐ கட்டணத்தை எளிமையாக UPI Lite என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த புதிய அம்சத்தின் மூலமாக ஐபோன் பயனாளர்கள் யுபிஐ பின்னை பதிவு செய்யாமல் பாதுகாப்பான மற்றும் விரிவான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு UPI வாலட்டில் கட்டாயமாக அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை பணம் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

அதே சமயம் ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக 200 ரூபாய் வரை பயன்படுத்தும்படியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த யுபிஐ லைட் மூலமாக ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 பரிவர்த்தனைகள் வரை மேற்கொள்ளலாம். புதிய அம்சத்தின் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முதலில் ஐபோன் பயனர்கள் பேடிஎம் செயலியை திறந்து அதன் முகப்பு பக்கத்தில் யுபிஐ லைட் என்ற பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு உங்களின் வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு அதனை உறுதிப்படுத்த வேண்டும். பிறகு யுபிஐ லைட் வாலட்டில் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரையும் பணத்தை சேர்த்து பணம் செலுத்துவதற்கான UPI விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து உங்களுக்கான பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.