தமிழக வெற்றி கழகம் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள தவெக களப்பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. நடிகர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில் ஈரோட்டில் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருச்செங்கோடு பகுதியில் நேற்று நடைபெற்ற தவெக ஆலோசனைக் கூட்டத்தின் போது பெண் நிர்வாகிகள் பலர் புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து வணங்கினர். அப்போது அவரும் பதிலுக்கு அந்தப் பெண்களின் காலில் விழுந்து வணங்கினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.