சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான மற்றும் நிரந்தர வருமானம் அளிக்கக்கூடிய திட்டங்களில் ஒன்றுதான் பிக்சட் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் ஐந்து லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். மற்ற வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு இதில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. தற்போது வங்கிகள் வாரியாக வட்டி விகிதங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

RBL வங்கி FD திட்டத்தில் 7.80% வட்டியை வழங்குகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 8.30% வரை வட்டி வழங்குகிறது.  IDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 7.50% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8% வட்டியும் வழங்குகிறது. KVB வங்கி சாதாரண குடிமக்களுக்கு 7.30% மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டியை வழங்குகிறது. கனரா, BOB, PNB ஆகிய வங்கிகளில் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 7.25% மும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியை வழங்குகிறது.