புதிய வேலைக்காக வேறு நகரத்திற்கு இடம்பெயர்ந்த வெறும் 19 நாட்களிலேயே, கிராஃபிக் டிசைனர் பெண் ஒருவர் வேலையை விட்டு நீக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அந்தப் பெண் தனது புதிய வேலைக்காகச் சொந்த ஊரை விட்டு புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். ஆனால், அவர் பணியில் சேர்ந்த மூன்றே வாரங்களுக்குள், “நீங்கள் இந்த வேலைக்குச் சரியான ஆள் இல்லை” என்று கூறி நிறுவனம் அவரை திடீரென பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும் புதிய இடத்தில் வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே வேலை இழந்தது தனக்கு பெரும் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் தந்ததாக அந்தப் பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஒரு வேலைக்காகப் பெரும் செலவு செய்து, தங்களது இருப்பிடத்தை மாற்றி வரும் ஊழியர்களை நிறுவனங்கள் எவ்வளவு எளிதாகக் கையாண்டு தூக்கி எறிகின்றன என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம், கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதநேயமற்ற செயல்பாடுகள் மற்றும் ஊழியர்களுக்கான வேலை பாதுகாப்பு குறித்து நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
