திருச்சியில் ஜூன் 1-ஆம் தேதி நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை அதிரடியாக விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அதிமுக ஐடி விங் (AIADMK IT Wing) சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள படுபயங்கரமான பதிவு  பரபரப்பை  கிளப்பியுள்ளது!

நடிகர் யோகி பாபு கோட் போட்டிருக்கும் நகைச்சுவைப் புகைப்படத்தை அட்டாச் செய்து, “தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்காமல் முதல்வர் ஆச்சரியக்குறித்தனமாகப் பேசியுள்ளார்; கத்தி பேசுனா, ‘கத்தி’ பட டயலாக் மாடுலேஷன்ல பேசுனா பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா?!” என்று அதிமுக மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆட்சியில் குற்றங்கள், மரணங்கள் நடந்து பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும்போது, அதைப்பற்றி கவலைப்படாமல் “சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதும், நிர்வாகம் தானாகச் செயல்படும்” எனப் பேசுவது என்ன மாதிரியான புது உருட்டு? இது அப்பட்டமான ‘நார்சிசிசம்’ (சுயதம்பட்டம்) இல்லையா என்றும் சாடியுள்ளனர்.

“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வதற்குப் பெயர் தான் ‘மாற்றமா’ எனக் கேட்டுள்ள அதிமுக, ஆட்சிக்கு வரும் முன்பே தவெக நடத்திய குதிரை பேரத்திற்கு அமமுக மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் கையெழுத்து வீடியோவே ‘சாட்சி நம்பர் 1’ என்றும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தைப் பற்றி ஏன் வாய்திறக்கவில்லை என்றும் மரண மாஸ் கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்துள்ளது.

எங்களை வாயளவில் “மற்றும் பலர்” என்று கிண்டலடிக்கும் முதல்வர் விஜய், 24 மணி நேரமும் அடுத்து அதிமுகவில் இருந்து யாரை இழுக்கலாம் என்ற நினைப்பிலேயே இருப்பது ஏன் என்றும், மக்களை ஏமாற்றுவதிலும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதிலும் திமுகவையே மிஞ்சும் அளவுக்கு விஜய் ஆட்சி செயல்படுவதாகவும், எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்றும் அதிமுக ஐடி விங் விடுத்துள்ள இந்த  போஸ்ட், தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>