தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், இப்போ டெல்லியிலிருந்து கிளம்பியுள்ள ஒரு ஹாட் நியூஸ் ஒட்டுமொத்த இந்திய அரசியல் களத்தையுமே உலுக்கி எடுத்துட்டு இருக்கு…!
வரும் ஜூன் 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள ‘INDIA’ கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்க்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி அழைப்பால், ‘INDIA’ கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போகிறதா என்ற மில்லியன் டாலர் கேள்வி அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதற்கிடையே, டெல்லி காங்கிரஸின் இந்த மூவ், கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். காங்கிரஸ் கட்சி தவெக-வை கையில் எடுப்பதால், ‘INDIA’ கூட்டணியில் திமுக இனி நீடிக்க வாய்ப்பில்லை என்றும், இதன் காரணமாக இந்த மெகா கூட்டணிக்கு ஒரு ‘புதிய பெயர்’ சூட்டப்படலாம் என்றும் கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
ஜூன் 6 மீட்டிங்கில் என்ன நடக்கப் போகுது, தமிழக அரசியல் சமன்பாடுகள் எப்படி மாறப்போகுதுன்னு பார்க்க ஒட்டுமொத்த நாடே இப்போ டெல்லியை நோக்கி காத்துக்கிட்டு இருக்கிறது..!!
