“விஜய் அண்ணா, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு உங்களோடு இணைவது வெளிப்படையான குதிரை பேர அரசியல் இல்லையா?” என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
குதிரை பேரம் என்ற விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விஜய் அண்ணா பேசி வருவதாகச் சாடிய அவர், டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை நேர்த்தியாகச் சந்திப்பதுதான் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் வரையிலான முதலமைச்சர்களின் மரபு என்று சுட்டிக்காட்டினார்.
ஆனால், விஜய் அண்ணா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்க பயந்து அவசர அவசரமாகக் காரில் ஏறி ஓடியதாக எழிலன் குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டில் அதிமுகவின் ஒரு குறிப்பிட்ட செக்மெண்ட்டை மட்டும் அவர் ரகசியமாகச் சந்தித்ததாகவும், இன்று அந்த ‘சோபா மாடல்’ சந்தி சிரி1த்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முன்வைக்காமல், ரகசியமாக அதிமுகவினரை வளைப்பதுதான் தவெக-வின் மாற்றத்துக்கான அரசியலா என்று எழிலன் அதிரடியாகக் கேட்டுள்ள இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
