திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் கூறினார். ஆனால் அதற்கு சீமான் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக சீமான் தற்போது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது நீங்க ஐபிஎஸ் அதிகாரி மாதிரி நடந்துக்கணும். திமுக ஐடி விங் மாதிரி நடந்துக்க கூடாது. அதிகாரத்தில் நீ ஒரு புள்ளி. அந்த அதிகாரத்தை எதிர்த்து சண்டை போடுகிறவன் நான். நீ எப்ஐஆர் போடு. நான் அதை குப்பையில் கிழித்து போடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் சீமான் வருண் குமார் ஐபிஎஸ் பற்றி இப்படி கூறியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.