“அட உட்காருங்க பா.. இல்ல இல்ல நீங்க தான் உட்காரணும்.! தமிழகத்தில் அரசியல் நாகரிகமும், புதிய தோழமையும் அடுத்த லெவலுக்குச் சென்றுள்ளதை நிரூபிக்கும் வகையில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு விழாவின் போது, ஒரு நெகிழ்ச்சியான தருணம் பதிவாகியுள்ளது. விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் என்.ஆனந்த், ராயபுரம் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமுவை நாற்காலியில் அமர வைக்க முயன்ற போது இருவருக்குள்ளும் பாசப் போராட்டம் நடந்தது!

“நீங்க உட்காருங்க.. இல்ல இல்ல நீ தான் பா உட்காரணும்.. இல்ல இல்ல நீங்க தான், அட உட்காரு பா” என இருவரும் மாறி மாறிப் பேசிக் கொண்டு சிரித்தபடியே சீட்டில் அமர வைத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல், விழாவுக்கு வந்தவர்களுக்கு அமைச்சர் ஆனந்த் தானே முன்னின்று இன்முகத்தோடு உணவு பரிமாறி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது அங்கிருந்த தொண்டர்களை நெகிழ வைத்துள்ளது.

“>