தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் கட்டணமில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீடு என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டமாக மாற்றப்பட்டு அதன் கீழ் சிகிச்சை பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு தொகையும் ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை இணையாதவர்கள் இனி விண்ணப்பிப்பதற்கு அரசு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் டிசம்பர் 2ஆம் தேதி இன்று மருத்துவ காப்பீட்டில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணையாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழகம் முழுவதும் சுமார் 100 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.