இந்தியாவில் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்றது போல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது வங்கி தொடர்பான தகவல்கள் மற்றும் ஓடிபி ஆகியவற்றை யாருடனும் எதற்காகவும் பகிர்ந்து கொள்ள கூடாது.

அதே சமயம் ஏதாவது லிங்குகள் மூலம் பணம் அனுப்பும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பொதுவாக பணம் அனுப்பும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அதில் பணத்தை செலுத்துவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் பொது இணையதளம் அல்லது பொது வைஃபை கொண்டு வங்கி கணக்கை அணுகுவதை வாடிக்கையாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.