பேடிஎம் பேமெண்ட் வங்கி ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதால் எந்த ஒரு பண பரிவர்த்தனையையும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு தொடர முடியாது என அறிவித்தது. இந்த நிலையில் பேடிஎம் வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனே பிப்ரவரி 29ஆம் தேதிக்கு முன்பு வாலட்டில் வைத்திருக்கும் பணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இந்த செயல்முறையை முடிப்பதற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருதி மார்ச் 15 வரை இந்த செயல்முறையை நீட்டித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் இது தொடர்பான கணக்கை முடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே பேடிஎம் FASTag பயனர்களும் மார்ச் 15ஆம் தேதிக்கு முன்பு வேறு ஒரு கணக்குடன் இணைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.