நாட்டின் தலைநகரான டெல்லியில், அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்டதாகக் கருதப்படும் சொகுசு கார் ஒன்று மிக எளிதாகத் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலேனோ காரில் வந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பார்ச்சூனர் காரின் பூட்டை வெறும் ஐந்தே நிமிடங்களில் உடைத்து, அதனைத் திருடிச் சென்றுள்ளனர்.

​இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இவ்வளவு விலை உயர்ந்த காரின் பாதுகாப்பு அம்சம் இவ்வளவு பலவீனமாக இருப்பதா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.